சென்னை, ஜூன் 30 – ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 1, 51, 252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் ஜெயலலிதா. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
சென்னை ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.தி.மு.க.வின் வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கடந்த 27-ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், தமிழக முதலவர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.மகேந்திரன் மற்றும் சுயேட்சைகள் உட்பட 28 பேர் போட்டியிட்டனர்.
#TamilSchoolmychoice
இந்தத் தேர்தலில் மொத்தம் 74.4% வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஆரம்பம் முதல் முன்னணியில் இருந்த ஜெயலலிதா, ஒரு லட்சத்து 51, 252 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். ஜெயலலிதா வெற்றியை அவரது கட்சியினர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.