Home கலை உலகம் ‘கெட்ட பையன்டா இந்தக் கார்த்தி’ -ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத் தலைப்பு!

‘கெட்ட பையன்டா இந்தக் கார்த்தி’ -ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத் தலைப்பு!

548
0
SHARE
Ad

GV-Prakash-loses-9-Kgசென்னை,ஜூன் 30-  தமிழ்ச் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் தற்போது இளம் கதாநாயகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார்.

‘பென்சில்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், ‘டார்லிங்’ படம் முதலில் வெளியாகி, இவருக்கு இளம் நாயகன் என்கிற அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.

இப்படத்தில் இவருக்கு இரட்டைக் கதாநாயகிகள்: ஒருவர்,கயல் ஆனந்தி; மற்றொருவர் பிரியா ஆனந்த்.

#TamilSchoolmychoice

நடிகர் ஆர்யாவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பாகும்.

இதை அடுத்து ஜிவி பிரகாஷ் நடிக்கும்புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா? ‘கெட்ட பையன்டா இந்தக் கார்த்தி’.

இதுதான் இவரது அடுத்த படத்தின் தலைப்பு.

ரஜினிகாந்த் நடித்த ‘முள்ளும் மலரும்’ படத்தின் மிகப் புகழ்பெற்ற வசனமான “கெட்ட பய சார் இந்தக் காளி” வசனத்தைத் தான் இப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள்.

வெற்றிமாறன் திரைக்கதை, அட்லீ வசனம் எழுத புதிய இயக்குனர்களான சங்கர்- குணா இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிறது.

இதெல்லாம் பரவாயில்லை. இப்போது புதிதாக வெளியாகியிருக்கும் மற்றொரு தகவல். பாண்டிராஜின் உதவியாளர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

இந்தப் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? ‘பாட்ஷா என்கிற ஆண்டனி’

தலைப்பு வைப்பதில் ஜி.வி.பிரகாஷின் வழி, தனி வழியோ?