Home நாடு இளவரசருக்கு ஜெட் விமானத்தைப் பிறந்தநாள் பரிசாக அளித்த ஜோகூர் சுல்தான்!

இளவரசருக்கு ஜெட் விமானத்தைப் பிறந்தநாள் பரிசாக அளித்த ஜோகூர் சுல்தான்!

603
0
SHARE
Ad

TMJ3006ஜோகூர் பாரு, ஜூலை 1 – ஜோகூர் இளவரசர் தனது பிறந்தநாளுக்கான பரிசாக ஜெட் விமானம் ஒன்றைப் பெற்றுள்ளார். இந்தப் பரிசை அளித்திருப்பது அவரது தந்தையும் ஜோகூர் சுல்தானுமான இப்ராகிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்கந்தர் ஆவார்.

நேற்று செவ்வாய்க்கிழமையன்று இளவரசர் துங்கு இஸ்மாயின் பிறந்தநாளையொட்டி அவருக்கு இப்பரிசை அளித்தார் சுல்தான்.
துங்கு இஸ்மாயில் தனது பிறந்தநாள் பரிசைப் பெறும் புகைப்படங்கள் ‘ஜோகூர் சதர்ன் டைகர்ஸ்’ என்ற பெயரிலான முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தனது பிறந்தநாளையொட்டி நோன்புத் துறப்புக்காக அனைத்து மாவட்டங்களுக்கும் கால்நடைகள் வழங்கப்படும் என்று துங்கு இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், ஜோகூரில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் நலிவுற்றோருக்கு நல உதவிகள் வழங்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.