Home நாடு இனி மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை அறிவிக்கப்படமாட்டாது – ஹசான் மாலிக்

இனி மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை அறிவிக்கப்படமாட்டாது – ஹசான் மாலிக்

525
0
SHARE
Ad

sbnnut 2கோலாலம்பூர், ஜூலை 1 – இனி மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை அறிவிக்கப்படமாட்டாது என உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹசான் மாலிக் தெரிவித்துள்ளார்.

“மாதத்தின் கடைசி நாளன்று விலைகளை அறிவிக்கும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்,” என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்.

கடந்த மாதம், உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் துறையின் அகப்பக்கம் வழி பெட்ரோல், டீசல் விலைகள் அறிவிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

ஜூன் மாதம் ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 2.05 வெள்ளி என்றும், ரோன் 97 எரிபொருள் விலை லிட்டருக்கு 2.35 வெள்ளி என்றும் வாகனமோட்டிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விலையில் பொருள் மற்றும் சேவை வரியும் அடங்கும்.

கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலையானது அனைத்துலகச் சந்தை மதிப்புக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்ற முடிவை அமைச்சு மேற்கொண்டு செயல்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை உயர்வு

இன்று ஜூலை 1-ம் தேதி முதல் இம்மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.

அதன் படி, ரோன்95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து 2.15 ரிங்கிட்டாகவும், ரோன்97 பெட்ரோல் லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து 2.55 ரிங்கிட்டாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.