Tag: விஸ்வரூபம்
இஸ்லாமிய தலைவர்களுடன் சந்திரஹாசன் பேச்சு வார்த்தை
சென்னை, பிப்.01 - விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டு பிரச்சனை குறித்து கமல்ஹாசனின் அண்ணனும், விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சந்திரஹாசன் (படம்), இன்று இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற...
“கமலுக்கும், எனக்கும் தனிப்பட்ட பகை இல்லை வன்முறையை தடுக்கவே விஸ்வரூபத்துக்கு தடை’- ஜெயலலிதா
சென்னை, பிப்.1-"கமலுக்கும், எனக்கும் தனிப்பட்ட பகை இல்லை. விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதன் மூலம் தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, அப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது" என்று முதல்வர் ஜெயலலிதா...
தமிழ் நாட்டிலிருந்து வெளியேறி, மதச் சார்பற்ற வேறு மாநிலத்திற்கோ, நாட்டிற்கோ செல்வேன் – கமல்...
சென்னை, ஜன.30: தனது சொத்துக்களை அடமானம் வைத்து விஸ்வரூபம் படத்தை எடுத்துள்ளதாகவும் தற்போது பட வெளியீடு தாமதம் ஆவதால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்கும் அவல நிலைக்கு தான் ஆளாகியுள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன்...
தமிழக அரசின் மேல் முறையீடு இன்று காலை விசாரிக்கப்படும்
ஜனவரி 30 - விஸ்வரூபம் படத்தை திரையிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. மேல் முறையீடு விசாரிக்கப்படும் வரை விஸ்வரூபம் படத்தை திரையிடலாம்...
விஸ்வரூபம்: தமிழ் நாட்டில் தடை நீங்கியதால் மலேசியாவிலும் தடை நீங்குமா?
ஜனவரி 30 – தமிழ் நாட்டில் விஸ்வரூபம் படத்திற்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று நீக்கியதைத் தொடர்ந்து மலேசியாவிலும் இந்த படம் திரையிடப்படுமா என்ற ஆர்வம் மலேசிய சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
கடந்த சில...
தமிழ்நாட்டில் விஸ்வரூபம் படத்தின் 1 மணி நேர காட்சிகளை நீக்க அதிகாரிகள் கெடுபிடியா?
சென்னை: ஜனவரி 29 - விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான வழக்குகள் சேன்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றன.
நீதிமன்ற அறிவுறுத்தல் படி கமல் தரப்பும், அரசு அதிகாரிகள் தரப்பும்...
இணையதளத்தில் விஸ்வரூபம்; கமல் அதிர்ச்சி!
சென்னை,ஜன.29-விஸ்வரூபம் படம் தமிழகம் மற்றும் பல இடங்களில் திரையிடப்படாத நிலையில் சில இணையதளங்களில் வெளியானது. மேலும் விழுப்புரத்தில் ஒரு கடையில் திருட்டு பதிவு நாடாவும் (விசிடி) பிடிபட்டது. இதனால் கமல் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இஸ்லாமிய...
விஸ்வரூபம் விவகாரம்: தமிழ் நாட்டில் தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு
சென்னை, ஜனவரி 28, -- விஸ்வரூபம் விவகாரத்தில்,சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை நாளை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.
நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம்திரைப்படத்தில் சர்ச்சைக்குரியகாட்சிகள் இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, படத்தைதமிழகத்தில் திரையிட மாநில அரசு தடை விதித்தது.
தடைக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன்தரப்பில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் விஸ்வரூபம் படத்தை பார்த்து ஆய்வு செய்தது. இதில், தயாரிப்பு நிறுவனம், ரசிகர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பிலும் பிரதிநிதிகள் அந்தப்படத்தை பார்த்தனர்.
இந்நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டநிலையில் தீர்ப்பு நாளை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால், தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் சர்ச்சை குறித்து கருணாநிதி அறிக்கை
சென்னை, ஜனவரி 27 - விஸ்வரூபம் படப்பிரச்சனையில் இதுவரை மௌனம் காத்து வந்த திமுக தலைவர் முதல் முறையாக தனது கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை விவரம் பின்வருமாறு:-
"கலைஞானி தம்பி கமல்ஹாசனின் விஸ்வரூபம்...
கமலுக்கு ஆதரவாக திரையுல பிரமுகர்கள் அறிக்கை
சென்னை, ஜனவரி 27 - நடிகர் கமல்ஹாசன் என்றைக்குமே சமூக பொறுப்புடன் நடந்து கொள்பவர் என தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இந்த சமூகத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும்...