Home நாடு செர்டாங் மருத்துவமனை: குத்தகையாளர் தான் அதற்கு பொறுப்பு – சுப்ரா

செர்டாங் மருத்துவமனை: குத்தகையாளர் தான் அதற்கு பொறுப்பு – சுப்ரா

818
0
SHARE
Ad

Dr S. Subramaniamகோலாலம்பூர், டிச 13 – செர்டாங் மருத்துவமனையின் மேற்கூரை அடிக்கடி சரிந்து விழுவதற்கு அதன் கட்டுமானக் குத்தகை நிறுவனம் தான் பொறுப்பு என்று அரசாங்கம் கூறியுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறுகையில், “கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட இந்த மருத்துவமனையில், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை 7 மேற்கூரை சரிவு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. அரசாங்கம் அந்த கட்டிடத்தின் மறுசீரமைப்புக்காக இதுவரை 30 மில்லியன் ஒதுக்கியுள்ளது.” என்று தெரிவித்தார்.

மேலும், “இனி அமைச்சு தலையிடாது. குத்தகை நிறுவனம் தான் கட்டிடத்திற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்.” என்று சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மருத்துவமனையின் ஒரு பகுதி மேற்கூரை தனியாகப் பிரிந்து வந்தது. அதற்காக 800,000 ரிங்கிட் செலவில் விரிசல் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மேற்கூரை சரிந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி, பிரசவப் பிரிவின் ஒரு பகுதியின் மேற்கூரை சரிந்தது. இனி ஒரு முறை சரிவு ஏற்பட்டால் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று அப்போது குரல்கள் எழுந்தன.

ஆனால் மீண்டும் நவம்பர் 14 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில், சுமார் 8 முதல் 10 அடி அகலத்திற்கு சரிவு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.