Home நாடு மார்ச் 23 ஆம் தேதி காஜாங் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மார்ச் 23 ஆம் தேதி காஜாங் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

684
0
SHARE
Ad

abdul-aziz-yusof3-aug25புத்ரா ஜெயா, பிப் 5 – காஜாங் இடைத்தேர்தல் வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

அத்துடன் வேட்புமனுத் தாக்கல் வரும் மார்ச் 11 ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப் பதிவுகள் மார்ச் 19 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிகேஆர் கட்சியின் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, திடீர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அத்தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக கடந்த ஜனவரி 28 ஆம் தேதி அறிவித்தார்.

ஜனவரி 26 ஆம் தேதி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, காஜாங் தொகுதியில் மொத்தம் 39,278 பேர் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர்கள். அதில் 38,055 பேர் சாதாரண வாக்காளர்கள், 1,997 பேர் முன்கூட்டிய வாக்காளர்கள் மற்றும் 26 பேர் வாக்களிக்காதவர்கள் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஸீஸ் யூசோப் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த இடைத்தேர்தலை நடத்துவதற்கு ஆகும் செலவு 1.6 மில்லியன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பண்டார் பாரு பாங்கியிலுள்ள காஜாங் மாநகர சபை (MPKJ) டவுன் ஹாலில் வேட்புமனுத் தாக்கலும், வாக்குகள் கணக்கெடுப்பும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.