Home இந்தியா தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மூலம் இந்தியாவை மிரட்டுகிறது இலங்கை

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மூலம் இந்தியாவை மிரட்டுகிறது இலங்கை

482
0
SHARE
Ad

jeyaaசென்னை, மார்ச்.8-  தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை அமைதியாக  பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது  என்று இலங்கை அரசுக்கு அறிவுரை வழங்குமாறு  பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது வருத்தத்தை அளித்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 2ம் தேதி காரைக்காலைச் சேர்ந்த 10 மீனவர்களும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரை பகுதியின் தென் கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது பிப்ரவரி 6ம் தேதி இரவு துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த செண்பகம் என்ற மீனவர் படுகாயமடைந்தார். அவரை மற்ற மீனவர்கள் காப்பாற்று நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் ஒரு கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

ஏற்கனவே தூத்துக்குடியைச் சேர்ந்த 16 மீனவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளது தாங்கள் அறிவீர்கள்.

தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடித்து வரும் மீனவர்களிடம் ஒரு பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தும் சூழ்நிலையை இலங்கை கடற்படையினர் உருவாக்கி வருகின்றனர்.

இலங்கை தமிழர்கள் மீது இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு எதிராக நடந்து வரும் பெரிய அளவிலா போராட்டங்களும், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் குரல் கொடுத்துவருவதும்தான் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பின்னணி என்று தெரிகிறது.

மீனவர்கள் மீது தாக்குதல், சமீபத்திய துப்பாக்கி சூடு ஆகிய சம்பவங்கள் சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிராக இந்திய அரசு  குரல் எழுப்பக் கூடாது என்பதற்கான மறைமுக மிரட்டலாகத்தான் தெரிகிறது.

இதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. பாரம்பரியமான இடங்களில் மீன் பிடித்துவரும் அப்பாவித் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் என்று இலங்கை அரசுக்கு இந்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.