Home நாடு ‘த எட்ஜ்’ பத்திரிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது உள்துறை அமைச்சு!

‘த எட்ஜ்’ பத்திரிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது உள்துறை அமைச்சு!

895
0
SHARE
Ad

The Edgeகோலாலம்பூர், ஜூலை 24 – 1எம்டிபி விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக ‘த எட்ஜ் வீக்லி’ மற்றும் ‘த எட்ஜ் பினான்சியல் டெய்லி’ ஆகிய இரு பத்திரிக்கைகளுக்கும் மூன்று மாதங்கள் இடைக்காலத் தடை விதித்து உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை வரும் ஜூலை 27 -ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

1 எம்டிபி விவகாரத்தில், தாங்கள் இரு பத்திரிக்கைகளிலும் வெளியிட்ட செய்தி, மக்களுக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துவிட்டதாக உள்துறை அமைச்சு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக ‘த எட்ஜ்’ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூன்று மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவையும் மீறி ‘த எட்ஜ்’ செய்திகளைப் பிரசுரம் செய்யுமானால், அதன் உரிமம் முற்றிலும் பறிக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், இந்த தடை உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தை அனுகப் போவதாக ‘த எட்ஜ்’ ஊடகக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹோ காய் தட் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் ‘த எட்ஜ்’ ஊடகக் குழுமத்தில் மொத்தம் 350 ஊழியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.