Home Featured நாடு மொசாம்பிக்கில் கண்டறியப்பட்ட பாகம் எம்எச்370 மாதிரியுடன் ஒத்துப் போவதாகத் தகவல்!

மொசாம்பிக்கில் கண்டறியப்பட்ட பாகம் எம்எச்370 மாதிரியுடன் ஒத்துப் போவதாகத் தகவல்!

886
0
SHARE
Ad

Liow-Tiong-Laiகோலாலம்பூர் – மொசாம்பிக் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகம்,எம்எச்370 விமானத்தை தேடும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் நகர்வு மாதிரியுடன் (drift modelling) ஒத்துப்போவதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் இன்று அறிவித்துள்ளார்.

கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் கடல் அலைகளால் எந்தெந்தப் பகுதிகளுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிப்பது தான் இந்த டிரிப்ட் மாடலிங்.

அதன் படி, கண்டெடுக்கப்பட்டுள்ள பாகம் எம்எச்370 பாகமாக இருப்பின் அது, ஏற்கனவே நிர்ணயித்துள்ள நகர்வு மாதிரியின் படி இடம்பெயர்ந்து மொசாம்பிக் கடற்பகுதியை அடைந்திருக்கலாம் என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

Ccj_6SDWIAAjtbeமேலும், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த பாகத்தை ஆய்வு செய்வதற்காக மொசாம்பிக் சென்றிருப்பதாகவும் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழுவின் முடிவின் படி அந்த பாகம் ஆஸ்திரேலியாவிற்கும் அனுப்பி வைக்கப்படலாம் என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.

தனக்குக் கிடைத்திருக்கும் தகவலின் படி, அது போயிங் 777 விமானத்தின் பாகமாக இருப்பதற்கு ‘அதிகமான சாத்தியக்கூறுகள்’ இருப்பதாகவும் லியாவ் தெரிவித்துள்ளார்.

எனினும், இறுதி முடிவு வரும் வரை பொதுமக்கள் இது குறித்து வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.