கோலாலம்பூர் – கடந்த வாரம் மொசாம்பிக் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகம் நேற்று, மொசாம்பிக் வான் போக்குவரத்து அதிகாரிகளால், மலேசிய நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்தப் பாகம் மாயமான எம்எச்370 விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுவதால், தற்போது மலேசிய அதிகாரிகள் அதனைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்தப் பாகத்தில் ‘கால் வைக்காதீர்கள் – No Step’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வில் அது விமானத்தின் வால் பகுதியைச் சேர்ந்த ஒரு பாகம் என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே, ரீயூனியன் தீவில் கிடைத்த இரண்டாவது பாகம் குறித்தும் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.