Home Featured நாடு ரெ.கார்த்திகேசுவின் படைப்பிலக்கியக் கருத்தரங்கு நடைபெறுகின்றது!

ரெ.கார்த்திகேசுவின் படைப்பிலக்கியக் கருத்தரங்கு நடைபெறுகின்றது!

1360
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான முனைவர் ரெ.கார்த்திகேசுவின் இலக்கியப் படைப்புகள் மீதான, படைப்பிலக்கியக் கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகின்றது.

Karthigesu-Re Ka-function banner

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், மலாயாப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் புலமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

#TamilSchoolmychoice

கிம்மா கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டத்தோஸ்ரீ சைட் இப்ராகிம் இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்கின்றார். துணையமைச்சர் டத்தோ எம்.சரவணனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கின்றார்.

இந்தியத் தூதர் திருமூர்த்தியும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர்களும், வாசகர்களும் கலந்து கொண்டு, ரெ.கா. என இலக்கிய வட்டங்களில் அன்புடன் அழைக்கப்படும் ரெ.கார்த்திகேசுவின் படைப்பிலக்கியங்கள் மீதான விவாதங்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் முன் வைப்பர் என எதிர்பார்க்கப்படுகினது.

ரெ.கார்த்திகேசுவின் படைப்புக்களை மின் நூலாக பதிப்பிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள முத்து நெடுமாறனும், அந்தத் திட்டம் குறித்து இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.

அவரது படைப்புகளை அனைத்து தரப்புகளுக்கும் கொண்டு செல்லும் முயற்சியாகவும், தொழில் நுட்ப ரீதியாக ஒரு நிரந்தர ஆவணமாக ரெகாவின் படைப்புகளை நிலைத்து நிற்கச் செய்யும் முயற்சியாகவும், இந்த மின் நூல் திட்டம் திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் படைப்பாளிகளில் ரெகாவுக்கு முக்கிய இடம் உண்டு. பன்முகத் திறமைகள் கொண்டவர் அவர் என்பதோடு, இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் தனது தனித்துவ முத்திரையைப் பதித்தவர். சளைக்காமல் எழுதி வருபவர். 

அவருக்கும் அவருடைய படைப்புகளுக்கும் வழங்கப்படும் ஒரு கௌரவமாக இன்றைய நிகழ்ச்சி அமைகின்றது.