Home Featured உலகம் பெல்ஜியம் விமான நிலையத்தில் இரட்டை குண்டு வெடிப்பு: 17 பேர் பலி – பலர் காயம்!

பெல்ஜியம் விமான நிலையத்தில் இரட்டை குண்டு வெடிப்பு: 17 பேர் பலி – பலர் காயம்!

812
0
SHARE
Ad

CeIs2DYXIAAT0oaபிரசல்ஸ் – பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையத்தில் இன்று நடந்த இரட்டை குண்டு வெடிப்பில், 17 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமுற்றதாகவும், உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் கடந்த வாரம் தான் பிரசல்ஸ் நகரில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது அடுத்தடுத்த விசாரணைகளில் தெரியவரலாம்.

#TamilSchoolmychoice

அமெரிக்கன் ஏர்லைன் பிரிவில் முதல் குண்டு

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பதிவு மேசை (check-in desk) அருகே தான் முதல் குண்டு வெடித்ததாக பிரசல்ஸ் விமான நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக, பயணிகள் நுழைவு வாயிலில் இரண்டாவது குண்டு வெடித்துள்ளது.

CeInZO5UYAEtj55மேலும், பல தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான வெடிகுண்டுகள் கொண்ட வார் பட்டைகளையும் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதல் குண்டு வெடிப்பதற்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவன், பின்னர் அராப் மொழியில் எதையோ உரக்க கத்திவிட்டு குண்டை வெடிக்கச் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மெட்ரோ இரயில் நிலையத்தில் மூன்றாவது குண்டு

விமான நிலையத்தில் குண்டு வெடித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் தலைநகரின் மெட்ரோ இரயில் நிலையத்தில் இரண்டாவது குண்டு வெடித்துள்ளது பெல்ஜியன் ஊடகம் கூறுகின்றது.

CeIk5yDXIAErzfSதற்போது மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், விமானங்கள் அனைத்தும் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதோடு, இரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.