Home Featured உலகம் எகிப்து விமானம் கடத்தல்: 4 பயணிகளைத் தவிர மற்ற அனைவரும் விடுவிப்பு!

எகிப்து விமானம் கடத்தல்: 4 பயணிகளைத் தவிர மற்ற அனைவரும் விடுவிப்பு!

840
0
SHARE
Ad

Cesk_yfXIAA4Xchகெய்ரோ – இன்று நண்பகல் எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் இருந்து கெய்ரோ சென்ற எகிப்த்ஏர் விமானம், மர்ம நபரால் கடத்தப்பட்டு தற்போது சைப்ரஸ் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதன் தற்போதைய நிலவரங்கள்:

1. அந்த விமானத்தில் மொத்தம் 55 பயணிகள், 7 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஆயதம் வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

2. விமானத்தில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

3. தங்களது எம்எஸ்181 விமானம் கடத்தப்பட்டுள்ளதாக எகிப்த்ஏர் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

4. கடத்தல்காரன் உடல் முழுவதும் வெடிக்கும் ஆயுதத்தைக் கட்டிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

5. தனக்கு அரசியல் தஞ்சம் வேண்டும் என்றும், மொழிபெயர்ப்பாளர் ஒருவர் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

6. விமானத்தில் இருக்கும் பெண்களையும், குழந்தைகளையும் வெளியேற கடத்தல்காரன் அனுமதித்துள்ளான்.

7. விமானத்தில் 4 வெளிநாட்டினரையும், பணியாளர்களையும் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக ஏர்லைவ் தெரிவித்துள்ளது. முன்னதாக 5 வெளிநாட்டினர் எனத் தகவல்கள் வெளிவந்தன.

8. அவர்களில் 3 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்களாம்.

9. கடத்தல்காரனின் பெயர் இப்ராகிம் சமாகா என்று எகிப்தின் அரசாங்கத் தொலைக்காட்சி கூறுகின்றது.