Home Featured உலகம் எகிப்துஏர்: விபத்திற்கு முன் விமானத்தின் கழிவறையில் புகை எழுந்துள்ளது!

எகிப்துஏர்: விபத்திற்கு முன் விமானத்தின் கழிவறையில் புகை எழுந்துள்ளது!

847
0
SHARE
Ad

EgyptAir-planeகெய்ரோ – மெடிடெரானியன் கடலில் விழுந்து நொறுங்குவதற்கு முன் எகிப்துஏர் விமானம் 804-ல் புகை ஏற்பட்டதற்கான சமிக்ஞைகள் கிடைத்துள்ளதாக விமானத் தரவு அறிக்கைகள் கூறுகின்றன.

விமானப் போக்குவரத்தைக் கண்காணித்து வரும் ஏவியேசன் ஹெரால்டு (Aviation Herald website) வெளியிட்டுள்ள தகவலில், அவ்விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அதன் கழிவறையில் புகை ஏற்பட்டதற்கான எச்சரிக்கை சமிக்ஞைகள் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.

எனினும், அந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

#TamilSchoolmychoice

இதனிடையே, எகிப்திய கடற்கரை நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து 290 கிலோமீட்டர் வடக்கே, நேற்று மனித சடலங்களும், பயணப் பெட்டிகளும், விமானத்தின் சிதைந்த பாகங்களும் மீட்கப்பட்டன.

என்றாலும், இன்னும் இரண்டு கருப்புப் பெட்டிகளும் மீட்கப்படாததால், விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

அவ்விமானத்தில், 30 எகிப்தியர்கள், 15 பிரஞ்சு நாட்டவர்கள், 2 ஈராக் நாட்டவர்களோடு, பிரிட்டன், பெல்ஜியம், கனடா, போர்ட்சுகல், அல்ஜீரியா, சவுதி, குவைத் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், மூன்று குழந்தைகள், 7 பணியாளர்கள் என மொத்தம் 66 பேர் இருந்துள்ளனர்.