Home Featured தமிழ் நாடு சுவாதி கொலையாளி பிடிபட்டது எப்படி? பின்னணி என்ன?

சுவாதி கொலையாளி பிடிபட்டது எப்படி? பின்னணி என்ன?

628
0
SHARE
Ad

Swathi-murder-chennaiசென்னை – இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில், சென்னை காவல் துறைக்கு கடந்த எட்டு நாட்களாக ‘தண்ணி’ காட்டி வந்த கொலையாளி நேற்று பிடிபட்டிருக்கின்றான். அந்த விவகாரம் குறித்த புதிய, அண்மையத் தகவல்கள் இவை:

செங்கோட்டையில் கைது

  • கொலையாளியின் பெயர் ராம்குமார். திருநெல்வேலி அருகே, தென்காசி பகுதியில், செங்கோட்டை என்ற இடத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் அவனைக் காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி

  • காவல் துறையினர் ராம்குமாரை சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்டபோது, அவன் தன் கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றான். ஆனால் காவல் துறையினர் உடனடியாகத் தடுத்து, அவனைக் கைது செய்து தற்போது மருத்துவமனையில் வைத்திருக்கின்றனர்.
  • அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் ராம்குமார் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றான்.
#TamilSchoolmychoice

தாத்தாவின் அரிவாளைக் கொண்டு கொலை

  • விவசாயப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ராம்குமார், அவனது தாத்தா பயன்படுத்திய அரிவாளைக் கொண்டு சுவாதியைக் கொலை செய்திருக்கின்றான்.
  • கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள் அவ்வளவாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படுவதில்லை. மைசூர் பகுதியில் பழங்குடியினர் பயன்படுத்தப்படும் அரிவாள் இது என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
  • கொலை செய்ததும் அந்த அரிவாளில் பதிந்திருந்த தனது கைரேகைகளை அழித்து விட்டு, அரிவாளை வீசி விட்டு சென்றிருக்கின்றான் ராம்குமார். பின்னர் காவல் துறையினர் அந்த அரிவாளைக் கைப்பற்றியிருக்கின்றனர்.

இளைஞர் விடுதியில் (மேன்சன்) தங்கியிருந்தான்

  • நுங்கம்பாக்கம் அருகில் இருந்த ஓர் இளைஞர் தங்கும் விடுதியில் ராம்குமார் தங்கியிருந்திருக்கின்றான்.
  • அவன் குறித்த தகவல்களை அந்தத் தங்கும் விடுதியின் காவலாளி தெரிவித்திருக்கின்றார்.
  • கொலை நடந்த நுங்கம்பாக்கம் பகுதியில், கொலை நடந்த நேரத்தில் அங்குள்ள தொலைத் தொடர்பு கோபுரத்தில் பதிவாகியிருந்த சுமார் 5 இலட்சம் கைத்தொலைபேசி அழைப்புகளை காவல் துறையினர் நுணுக்கமாகவும், அணுக்கமாகவும், ஆராய்ந்திருக்கின்றனர்.
  • குறிப்பாக, சுவாதியின் கைத்தொலைபேசி உரையாடல்கள் ஆராயப்பட்டத்தில் சில விவரங்களை காவல் துறையினர் பெற்றிருக்கின்றனர்.
  • நுங்கம்பாக்கம் பகுதியில் வீடு வீடாக சோதனை நடத்திய காவல் துறையினர், ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு வீட்டையும் அலசி ஆராய்ந்தனர்.
  • அதன்படி, அந்தக் குறிப்பிட்ட விடுதியில் தங்கியிருந்தவர்களை  விசாரித்ததில், கடந்த சில நாட்களாக அங்கு தங்கியிருந்துவிட்டு, இப்போது காலி செய்துவிட்டுப் போனவர்களின் பின்னணியை காவல் துறையினர் ஆராய்ந்ததில், ராம்குமார் குறித்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
  • அந்த விடுதியில் தங்கியிருந்த அவன் பின்னர் கொலையைச் செய்து விட்டு, அறையைக் காலி செய்துவிட்டு வெளியேறியிருக்கின்றான்.

மீனாட்சிபுரம் கிராமம் நோக்கி விரைந்த காவல் துறையின் தனிப்படை

  • உடனடியாக செங்கோட்டை பகுதி நோக்கி விரைந்த தனிப்படை மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் ராம்குமாரின் தாத்தா வீட்டில் அவனைக் கைது செய்தனர்.
  • ஒரே நாளில் – ஒரே சம்பவத்தில் இன்றைக்கு இந்தியா முழுவதும் புகழ்பெற்ற கிராமமாக மீனாட்சிபுரம் உருமாறிவிட்டது.
  • ராம்குமார் குடும்பத்தினரிடம் தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகநூல் கலாச்சாரமும் – ஒரு தலைக்காதலும் இணைந்த கொலை

  • இது ‘ஒரு தலைக்காதல்’ என முதல் கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
  • கடந்த 3 மாதங்களாக சுவாதியை விரட்டி, விரட்டி ராம்குமார் தனது காதலைச் சொல்லி வந்தாலும், சுவாதி அவனை சீண்டவில்லை என்று கூறப்படுகின்றது.
  • முகநூல் (பேஸ்புக்) மூலம் ராம்குமார்-சுவாதி இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அறியப்படுகின்றது.

(மேலும் செய்திகள் தொடரும்)