Home Featured நாடு பாஸ்-பிகேஆர் அதிகாரபூர்வமாகப் பிரிந்தன!

பாஸ்-பிகேஆர் அதிகாரபூர்வமாகப் பிரிந்தன!

1254
0
SHARE
Ad

PAS-PKR-Joint-symbol

கோலாலம்பூர் – அண்மையில் நடைபெற்ற பாஸ் கட்சியின் மாநாட்டில் பிகேஆர் கட்சியுடனானத் தங்களின் அரசியல் உறவுகளை முறித்துக் கொள்வதாக பாஸ் எடுத்த முடிவை கட்சியின் உச்ச ஆட்சிக் குழுவான ஷூரா மன்றம் இன்று வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டது.

கோலாலம்பூரில் உள்ள பாஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற அந்த மன்றத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து சிலாங்கூர் அரசாங்கத்தின் ஆட்சிக் குழுவிலிருந்து பாஸ் கட்சி விலகிக் கொள்ளுமா அதன் மூலம் சிலாங்கூரில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி கவிழுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஷூரா மன்றத்தின் முடிவை அறிவித்த மன்றத்தின் செயலாளர் நிக் முகமட் சவாவி சாலே, இருப்பினும், பிகேஆர் கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இன்னும் இருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கிறார்.