Home நாடு 33-ம் ஆண்டுத் தமிழ் விழா – கலை இரவு

33-ம் ஆண்டுத் தமிழ் விழா – கலை இரவு

914
0
SHARE
Ad

primaryகோலாலம்பூர் -கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் விழா 33-வது ஆண்டாக கடந்த ஜூலை 6-ம் தேதி துவங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இது குறித்து ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கை பின்வருமாறு:-

baratham2“மொழி, கலை, சமயம், பண்பாடு ஆகிய கூறுகளை உள்ளடக்கி, 6 வயது முதல் 60 வயதிலான அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வண்ணம் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.”

#TamilSchoolmychoice

“பரதப் போட்டி, ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் என பலதரப்பட்ட நிகழ்வுகள் இவ்விழாவில் நடந்தேறின. கிள்ளான் சுற்றுவட்டாரத்தை சார்ந்த சுமார் 3000 பேர் இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.”

open games2“தமிழ் விழாவினை வருடந்தோறும் தமிழ் மொழிக்கும், தமிழ் சமூகத்திற்கும் பங்காற்றிய சான்றோர்களுக்கு ஈகம் செய்வது நமது வழக்கமாகும். அவ்வகையில் இவ்வருட தமிழ் விழாவினை தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு ஈகம் செய்கின்றோம்.”

TamilVizha-Inv2

“அவ்வகையில் தமிழ் விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாய் கலை இரவு நாளை ஆகஸ்ட் 19 (சனிக்கிழமை), இரவு மணி 7.30க்கு கோலக்கிள்ளான் பண்டமாரான் ஜெயா நகராண்மைக் கழக மண்டபத்தில் (Dewan Serbaguna MPK Pandamaran Jaya) இனிதே நடைபெறவிருக்கிறது.”

“இக்கலை இரவில் நடனம், பாடல் போன்ற நிகழ்வுகளுடன் ஈகம் அங்கமும் சிறப்பித்தல் அங்கமும் நடைபெறும். பெருந்தலைவர் காமராசருக்கு ஈகம் செய்யும் அதே வேளையில் கோலக்கிள்ளான் திருக்குறள் மன்ற மேனாள் தலைவர் ந.முத்துகிருஷ்ணன் மற்றும் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் கோலக்கிள்ளான் உபகிளையின் மேனாள் தலைவர் குருபக்தி ரத்னா நா.சின்னதம்பி ஆகியோருக்கு சிறப்பு செய்யவிருக்கின்றோம்.”

Tamilvizha2017“இதனையே அழைப்பாகக் கொண்டு இக்கலை இரவில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அழைக்கின்றோம். மேல் விபரங்களுக்கு : ப.தர்மராஜ் 0169704436 / 0333240678.” – இவ்வாறு செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.