Home நாடு சபாவில் புதிய அடையாள அட்டைகளை வழங்குவது எளிதான காரியமல்ல – நஸ்ரி

சபாவில் புதிய அடையாள அட்டைகளை வழங்குவது எளிதான காரியமல்ல – நஸ்ரி

681
0
SHARE
Ad

nazriகோலாலம்பூர், மார்ச் 26 – சபா மாநிலத்தில் அனைத்து அடையாள அட்டைகளையும் திரும்பப்பெற்று, உண்மையான சபா வாசிகளுக்கு மட்டும் மீண்டும் புதிய அட்டைகளை வழங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று அம்மாநிலத்தின் தேசிய முன்னணியை அரசைச் சேர்ந்த மூன்று முக்கியக் கட்சிகளான அப்கோ (United Pasok Momogun Kadazandusun Murut Organisation), பி.பி.எஸ் (Parti Bersatu Sabah) மற்றும் பி.பி.ஆர்.எஸ் (Parti Bersatu Rakyat Sabah) ஆகியவை அனைத்து அடையாள அட்டைகளையும் திரும்பப் பெறுவது தொடர்பாக வெளியிட்டிருந்த கருத்தை மறுத்த முகமட் நஸ்ரி, “அப்கோ, பி.பி.எஸ், பி.பி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகள், சபா விவகாரம் தொடர்பாகத் தங்களது யோசனையைத் தெரிவித்துள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது இயலாத காரியம்” என்று தெரிவித்துள்ளார்.