Home நாடு “கிளிங்” – மீண்டும் கூறவேண்டாம் – மகாதீருக்கு இராமசாமி ஆலோசனை

“கிளிங்” – மீண்டும் கூறவேண்டாம் – மகாதீருக்கு இராமசாமி ஆலோசனை

717
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சிமயமான இந்தத் தருணத்தில், “கிளிங்” போன்ற சொற்களை பக்காத்தான் ஹரப்பான் தலைவர் துன் மகாதீர் பயன்படுத்தக் கூடாது என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி ஆலோசனை கூறியுள்ளார்.

மகாதீர் நல்ல நோக்கத்தில் கூறியிருப்பார் என்றாலும், இந்தியர்கள் அந்த வார்த்தையை தங்களைக் கீழ்த்தரமாக வர்ணிக்கும் ஒன்றாகவே பார்க்கிறார்கள் என்பதால், பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கான ஆதரவு பெருகி வரும் நேரத்தில் இதுபோன்ற சொற்பிரயோகங்கள் தேவையில்லை என்றும் இராமசாமி தெரிவித்தார்.

மகாதீர் இந்த வார்த்தையை இந்தியர்களை நோக்கிக் கூறவில்லை என்றும் இராமசாமி மகாதீரைத் தற்காத்தார்.

#TamilSchoolmychoice

“மகாதீர் மிகச் சிறப்பாக பக்காத்தானை வழிநடத்தி வருகின்றார். அவரால் பக்காத்தானின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மலாய் இனத்தினரிடையே ஒரு மாற்று தலைமைத்துவத்தை மகாதீரால் வழங்க முடிகிறது. மலாய்க்காரர்களும் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்நிலையில் இதுபோன்ற தேவையில்லாத சர்ச்சை வேண்டாம்” என்றும் இராமசாமி மேலும் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே, இதே போன்றதொரு ஆலோசனையை வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசனும் மகாதீருக்கு வழங்கியிருந்தார்.