Home கலை உலகம் 22 வெட்டுகளுடன் வெளியாகிறது ‘விஸ்வரூபம்-2’

22 வெட்டுகளுடன் வெளியாகிறது ‘விஸ்வரூபம்-2’

1279
0
SHARE
Ad

சென்னை – இந்தியாவின் மத்திய தணிக்கை வாரியத்தின் 22 வெட்டுகளுக்குப் பிறகு ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் கமல்ஹாசனின் இந்தப் படம் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.

கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’.  சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதோடு, பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய படம் விஸ்வரூபம். அதன் தொடர்ச்சியாக வெளிவரும் இரண்டாவது பாகம் இது.

ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தைப் பார்த்த இந்தியாவின் மத்திய தணிக்கை வாரியக்குழு உறுப்பினர்கள், 22 இடங்களில் வெட்டச் சொல்லியிருக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்தது போன்ற பல வன்முறைக் காட்சிகள் அப்படியே இந்தப் பாகத்திலும் இடம் பெற்றிருக்கிறது.

உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது, விஸ்வரூபம்-2.

மலேசியாவிலும் விஸ்வரூபம் – 2 இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.