Home One Line P2 சந்திராயன்-2: “தொடர்பு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன!”- விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்

சந்திராயன்-2: “தொடர்பு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன!”- விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்

945
0
SHARE
Ad

புது டில்லி: லேண்டர் விக்ரமுடன் தொடர்பு கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று செவ்வாய்க்கிழமை  இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

விக்ரம் லேண்டரை சந்திராயன் 2-இல் செலுத்தப்பட்ட ஆர்பிட்டரின் உதவியுடன் கண்காணித்து வருகிறோம். ஆனால் அதனுடன் இதுவரை எந்த தொடர்பும் ஏற்படவில்லை. லேண்டருடன் தொடர்புகளை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.” என்று இஸ்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சந்திரயான் -2-இன் விக்ரம் லேண்டர் உடைப்படாத நிலையில், திட்டமிடப்பட்ட தளத்திற்கு மிக நெருக்கமாக தரையிறங்கிய பின்னர் சந்திரனின் மேற்பரப்பில் சாய்ந்து கிடப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது. இதனிடையே, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்தத் திட்டத்தினை தொடர்வதற்கான நம்பிக்கையை வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த சனிக்கிழமையன்று, நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1கி.மீ உயரத்தில் இருந்தபோது, ‘பிரக்யான்ரோவரை ஏற்றிச் செல்லும் விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. அவ்விண்கலத்தில் போதுமான எரிபொருள் இருப்பதால், ஆர்பிட்டரின் ஆயுட்காலத்தை திட்டமிடப்பட்ட ஒரு வருடத்திலிருந்து, ஏழு ஆண்டுக்கு நீட்டிக்க முடியும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.