Home உலகம் பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

515
0
SHARE
Ad

pakistanகராச்சி, ஏப். 15-  பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு அடுத்த (மே) மாதம் 11ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக பிந்தியா ராணா ( படம் )என்ற திருநங்கை கராச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது ஏன்? என்பது தொடர்பாக பிந்தியா ராணா நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தான் அரசியலைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. கடந்த 2004ம் ஆண்டு என்னைப் போன்ற ஒரு திருநங்கை இறந்துவிட்டார். அவரது பிரேதத்தை சொந்த ஊரான பஞ்சாப் மாகாணத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தோம். நானும் உடன் சென்றேன்.

#TamilSchoolmychoice

ஆனால், விமானம் மூலம் பிரேதத்தை கொண்டு செல்வதற்குள் பல அவமானங்களை சந்திக்க நேர்ந்தது. என்னையும் இறந்துப்போன என் தோழியையும் அதிகாரிகள் கேவலமாக பேசி கேலி செய்தார்கள். அவள் எப்படி செத்தாள்? அவள் சாகும் அளவிற்கு நீ என்ன செய்தாய்? என்று ஆபாசமாக கிண்டல் செய்தனர்.

எங்களைப் போன்ற திருநங்கைகள் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகிறார்கள்? என்று எண்ணி அன்று மிகவும் வேதனைப்பட்டேன். அதிகாரவர்க்கம், தொழில்முறை அரசியல்வாதிகள், ‘ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள்’  ஆகியோரின் முகத்திரையை கிழிப்பதற்கான வாய்ப்பாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.

திருநங்கைகளின் அவலங்களை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அரசிடம் எடுத்துக்கூறி உரிய தீர்வு காணவே தேர்தலில் போட்டியிடுகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.