Home இந்தியா தமிழக அமைச்சரவையில் மாற்றம்- 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு

தமிழக அமைச்சரவையில் மாற்றம்- 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு

560
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 18- தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

jeyalalithaஅமைச்சர்கள் சி.த.செல்லபாபண்டியன், முகமது ஜான் விடுவிக்கப்பட்டு, புதிய அமைச்சர்களாக எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சண்முகநாதனுக்கு சுற்றுலாத்துறையும், அப்துல் ரகீமுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2b211692-dc34-4915-96cb-13a98f862677_S_secvpfஇதுதவிர சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த பச்சைமாலுக்கு தொழிலாளர் நலத்துறையும், பி.செந்தூர் பாண்டியனுக்கு இந்து அறநிலையத்துறையும், எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் தமிழக கவர்னர் ரோசய்யா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் நாளை மாலை 4.45 மணிக்கு பதவியேற்கின்றனர்.

வாரிய தலைவர்கள் நியமனம்:-

இன்று பல்வேறு துறைக்கான வாரிய தலைவர்களையும் முதல்வர் ஜெ., நியமித்துள்ளார். இதன்படி முனியசாமி (சேமிப்பு கிடங்கு கழகம் ), வி.என்.ரவி (ஜவுளி கழகம்), பிரபாகர் ( சிறுதொழில் மேம்பாடு), அருண்மொழித்தேவன் (சுற்றுலா மேம்பாடு), செந்தில்நாதன் (பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாடு) , ரவிச்சந்திரன் (வேளாண்கழகம்), வெங்கடேஸ்வரன் ( தொழில் துறை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.