Home உலகம் எகிப்து இடைக்கால அரசின் தலைவராக அட்லி மன்சூர் பதவியேற்பு

எகிப்து இடைக்கால அரசின் தலைவராக அட்லி மன்சூர் பதவியேற்பு

420
0
SHARE
Ad

கெய்ரோ, ஜூலை 5- எகிப்தின் இடைக்கால அரசின் தலைவராக அட்லி மஹ்மூத் மன்சூர் (படம்) பொறுப்பேற்றுள்ளார்.

அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முகமது மோர்ஸியை தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.

780679fb-9971-4435-a3ce-414e732f9b12-460x276முகமது மோர்ஸி பதவி விலக வேண்டும் என்று கோரி எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த வன்முறையில் பலர் உயிரிழந்தனர். இப்பிரச்னையை 48 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும் என்று ராணுவம் விதித்த கெடுவை மோர்ஸி ஏற்க மறுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice

பதவியேற்பு:

இதையடுத்து மோர்ஸியை பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்த ராணுவம், நாட்டின் தலைமைப் பொறுப்பை அரசியல் சாசன நீதிமன்ற தலைமை நீதிபதியான அட்லி மஹ்மூத் மன்சூரிடம் வழங்கியது. அவர் நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நாட்டின் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.

தடுப்புக் காவல்:-

112812_MideastEgyptMorsis-550x309இதற்கிடையே மோர்ஸி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை ராணுவம் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மோர்ஸி தங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ராணுவத் தலைமை அறிவித்துள்ளது.

முன்னதாக முகமது மோர்ஸி நாட்டை விட்டு வெளியேறுவதற்கும், உள்நாட்டிலேயே பிற பகுதிகளுக்குச் செல்வதற்கும் ராணுவம் தடை விதித்தது.

மோர்ஸியின் கட்சியைச் சேர்ந்த 300 பிரமுகர்களை கைது செய்ய தங்களுக்கு உத்தரவு வந்துள்ளதாக போலீஸôர் தெரிவித்துள்ளனர்.

தேர்தல்:-

அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு தாற்காலிக அரசிடம் ராணுவ தலைமை கமாண்டர் அப்தெல் ஃபடாஹ் சிசி கூறியுள்ளார். தற்போதுள்ள அரசியல் சாசன சட்டத்தை ராணுவம் ரத்து செய்துள்ளது. அரசமைப்பு சட்டம் தொடர்பாக ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்யவும், தேசிய நல்லிணக்கக் குழு அமைக்கவும் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே முகமது மோர்ஸி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “எகிப்தில் நடைபெற்றிருப்பது ராணுவப் புரட்சி’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “”அதிபர் மற்றும் ராணுவப் படைகளின் உயர்நிலை கமாண்டர் பதவியை தற்போதும் நான்தான் வகிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வன்முறை:-

மோர்ஸியை பதவியிலிருந்து அகற்றுவதாக ராணுவம் அறிவித்ததும், நாடெங்கும் வன்முறை வெடித்தது. மோர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். மோர்ஸிக்கு எதிராகப் போராட்டம் தொடங்கியது முதல் இப்போது வரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகத் தலைவர்கள் கருத்து:-

121204_barack_obama_ap_605முகமது மோர்ஸியை பதவியிலிருந்து நீக்குவதாக ராணுவ தலைமை கமாண்டர் அறிவித்தபோது, அரசியலில் இருந்து ராணுவம் எப்போதும் விலகியே இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், உலக நாடுகள் சில, ராணுவத்தின் நடவடிக்கை தொடர்பாக தங்களின் கவலையைத் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறுகையில், “மோர்ஸி பதவி நீக்கம், அரசியல் சாசன சட்டம் ரத்து உள்ளிட்ட ராணுவத்தின் நடவடிக்கைகளால் கவலை அடைந்துள்ளேன். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் விரைவில் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று ராணுவத்தை கேட்டுக்கொள்கிறேன். மோர்ஸியை கைது செய்யும் நடவடிக்கையை ராணுவம் கைவிட வேண்டும்” என்றார்.

பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் கூறுகையில், “”எகிப்து நிலவரம் மோசமாக உள்ளது. வன்முறையை கைவிடும்படி அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயக முறையில் நடைபெற்று வரும் ஆட்சியில் ராணுவத்தின் குறுக்கீடுகள் இருக்கக் கூடாது என்பதே எங்களின் கருத்து” என்றார்.

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ-மூன் கூறியது:-

“எகிப்து மக்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையை கைவிட்டு பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்” என்றார்.

இந்தியா யோசனை:-

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “எகிப்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வன்முறையை கைவிட்டு பேச்சு நடத்த முன்வர வேண்டும். சட்டத்தையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும் மதித்து நடக்க வேண்டும்.

எகிப்தில் 3000 இந்தியர்கள் வசிக்கின்றனர். 50 இந்திய நிறுவனங்கள் செயல்படுகின்றன. அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.