Home இந்தியா எல்லையில் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை?

எல்லையில் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை?

427
0
SHARE
Ad

புதுடெல்லி, ஆக.7- புருனேயில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் சமீபத்தில் சந்தித்துப் பேசினர்.

manmohaஅப்போது, நின்று போன இந்திய-பாகிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தையை மீண்டும் தொடர முடிவு செய்யப்பட்டது.

ஆனால் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வருகிற தாக்குதல்கள் இந்த சூழலை கெடுத்துள்ளது. அதுவும் இப்போது எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொலை செய்திருப்பது, இந்தப் பேச்சு வார்த்தை மீண்டும் தொடருமா என்பதில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கி உள்ளது.

#TamilSchoolmychoice

இதேபோன்று, அடுத்த மாதம் நியூயார்க் நகரில் நடைபெறுகிற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அப்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது இந்த சந்திப்பும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.