Home இந்தியா ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு!

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு!

910
0
SHARE
Ad

maran_dayanidhiபுதுடெல்லி, மார்ச் 17 – ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் அதன் நிர்வாகி சுவாமிநாதன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து, மாறன் சகோதரர்கள் கடந்த 2-ஆம் தேதி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்கள் மீது சிறப்பு நீதிபதி விசாரணை நடத்தினார்.

அப்போது, சிபிஐ வழக்கறிஞர் கே.கே.கோயல், ஜாமீன் மனுக்களுக்கு சிபிஐ தரப்பு பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதில், “இந்த வழக்கில் இன்னும் விசாரணை முழுமை பெறவில்லை. ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்துள்ள இருவரும், சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்கள். அவர்களால் இவ்வழக்கின் சாட்சியங்களை கலைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன”.

‘இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் கடுமையானவை. இதுதவிர வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்களில் ஆஜராகாமல், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சகோதரர்கள் ஜாமீன் மனுக்கள் மீது வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரணை நடைபெறும்” என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாறன் சகோதரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், “2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்குடன் தொடர்பில்லாத ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை இந்த நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை.”

“இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் முறையிட்ட போது, விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தப்பட்டது. எனவே, இது குறித்த மனு மீது விசாரணை நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையையும் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த சிறப்பு நீதிபதி சைனி, அதற்குள் இந்த மனுவுக்கு சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் உத்தரவிட்டார்.