Home வாழ் நலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் சூரியகாந்தி விதை!

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் சூரியகாந்தி விதை!

3403
0
SHARE
Ad

sunflower-seedsமே 14 – சூரியகாந்தி விதையில் இனிப்பு சுவையுடன் உடலுக்கு அவசியமான பல்வேறு சத்துக்கள் அடங்கி உள்ளன. மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும் இதனை கொறித்து உண்கின்றன. சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான எண்ணெய் தயாரிக்கப் பயன்படும்.

உலகம் முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. சூரியகாந்தி விதைகள் அதிக நினைவாற்றல் தரக்கூடியது. நல்ல சுவையுடைய இதனை மற்ற பருப்புகள் போலவே மென்று சாப்பிடலாம். 100 கிராம் விதைகள் 584 ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இதில் நிறைந்துள்ள கொழுப்பு அமிலங்களே உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகின்றன. லினோலெய்க் ஆசிட் எனப்படும் பூரிதமாகாத கொழுப்பு இதில் மிகுதியாக உள்ளது.

#TamilSchoolmychoice

இது கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்பின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும். இது நல்ல கொழுப்புகளான எச்.டி.எல். கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.

சூரியகாந்தி விதைகள் அதிக புரதம் உடைய பருப்பு வகையாகும். டிரிப்டோபான் எனும் சிறப்புக்குரிய அமினோ அமிலம் இதிலுள்ளது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக அவசியமானது.

sunflower seeds-100 கிராம் சூரிய காந்தி விதைகளை தினசரி உடலில் சேர்த்தல், நோய் எதிர்ப்பு பொருட்களான குளோரோஜெனிக் அமிலம், குயினிக் அமிலம், காபிக் அமிலம் அதிக அளவில் உற்பத்தியாகும்.

குளோரோஜெனிக் அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் ‘கிளைகோஜன்’ அளவை கட்டுக்குள் வைப்பதிலும் உதவும். ‘வைட்டமின்-ஈ’, சூரிய காந்தி விதைகளில் மிகுந்துள்ளது.

இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படும். செல் சவ்வுகள் முழு வளர்ச்சி பெற உதவும். போலிக் அமிலம் டி.என்.ஏ. இணைப்புக்கு அத்தியாவசியமானது.

நியாசின் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை குறைக்கும். கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் சூரியகாந்தி விதையில் உள்ளன.