சுந்தர் பிச்சை கூகுள் இணையதளத்தின் முதன்மைச் செயல் தலைவராக நியமிக்கப்பட்டவுடன், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தனக்கு வாழ்த்துத் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு,சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் மூலம் நன்றி கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆகையால், விரைவில் சுந்தர் பிச்சை, மோடியைச் சந்திக்க வரலாம் எனத் தெரிகிறது.
Comments