Home உலகம் இலங்கையில் புதிய அமைச்சரவை இன்று பதவிப் பிரமாணம்

இலங்கையில் புதிய அமைச்சரவை இன்று பதவிப் பிரமாணம்

650
0
SHARE
Ad

Parliamentகொழும்பு – ஆகஸ்ட் 17-ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலில்  வெற்றி பெற்ற ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிசேனாவின் இலங்கை  சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைக்கும் புதிய தேசிய அரசின் அமைச்சரவை, இன்று இலங்கை அதிபர் சிறிசேனா முன்னிலையில்  பதவி ஏற்றுக் கொண்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் மொத்தம் 42 அமைச்சர்களுக்கு இன்று அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 42 அமைச்சர்களில் 7 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சர்களின் விவரம் பின் வருமாறு:

#TamilSchoolmychoice

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே : தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சர்

ஜோன் அமரதுங்க : சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கிறிஸ்தவ விவகார அமைச்சர்

காமினி ஜயவிக்ரம பெரேரா : வன ஜீவராசிகள் அமைச்சர்

நிமல் சிறிபால டி சில்வா : போக்குவரத்து அமைச்சர்

எஸ்.பி. திசாநாயக்க : வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்

ஜோன் செனவிரத்ன : தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்

லக்ஷ்மன் கிரியெல்ல : பல்கலைக்கழக கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சர்

அனுரபிரியதர்ஷன யாப்பா : அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

சுசில் பிரேம்ஜயந்த : தொழில்நுட்ப கல்வி, தொழில்வாய்ப்பு அமைச்சர்

திலக் ஜனக மாரப்பன :சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர்

ராஜித சேனாரத்ன : சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்

ரவி கருணாநயக்க : நிதி அமைச்சர்

மஹிந்த சமரசிங்க : நிபுணத்துவம்,தொழிற்பயிற்சி அமைச்சர்

வஜிர அபேவர்தன : உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்

எஸ்.பி.நாவின்ன : உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி,கலாசார அமைச்சர்

பாட்டலி சம்பிக ரணவக்க :மேல்மாகாண, மாநகர அபிவிருத்தி அமைச்சர்

மஹிந்த அமரவீர : கடற்றொழில் மற்றும் நீரியல் துறை அமைச்சர்

நவீன் திசாநாயக்க : பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

ரஞ்சித் சியம்பலாபிட்டிய : மின்வலு அமைச்சர்

துமிந்த திசாநாயக்க : கமத்தொழில் அமைச்சர்

விஜேதாச ராஜபக்ஷ : புத்தசாசன அமைச்சர்

கே. ஹரிசன் : கிராம பொருளாதார அமைச்சர்

ரஞ்சித் மத்துமபண்டார : அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர்

கயந்த கருணாதிலக்க : பாராளுமன்ற மறுசீரமைப்பு வெகுஜன ஊடக அமைச்சர்

சஜித் பிரேமதாச : வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர்

அர்ஜுன ரணதுங்க : துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர்

எம்.கே.டி.எஸ். குணவர்தன :காணி

பி.திகாம்பரம் : மலையக கிராம அபிவிருத்தி , உட்கட்டமைப்பு , சமூக அபிவிருத்தி அமைச்சர்

சந்திராணி பண்டார : மகளிர் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர்

தலதா அதுகோரள : வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

அகிலவிராஜ் காரியவசம் : கல்வி அமைச்சர்

டி.எம். சுவாமிநாதன் : புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்துமத அலுவல்கள் அமைச்சர்

சந்திம வீரக்கொடி :பெற்றோலியம், பெற்றோலிய வாயுத் துறை அமைச்சர்

தயாசிறி ஜயசேகர : விளையாட்டுத்துறை அமைச்சர்

சாகர ரத்நாயக்க : தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

ஹரீன் பெர்னாண்டோ :தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர்

மனோ கணேசன் : தேசிய கலந்துரையாடல்கள் துறை அமைச்சர்

தயா கமகே : ஆரம்ப கைத்தொழில் அமைச்சர்