Home Featured உலகம் எம்எச் 370: ரீயூனியனில் பாகம் கிடைத்தாலும் தேடும் பகுதிகளை மாற்றப்போவதில்லை – ஆஸ்திரேலிய நிபுணர்கள்

எம்எச் 370: ரீயூனியனில் பாகம் கிடைத்தாலும் தேடும் பகுதிகளை மாற்றப்போவதில்லை – ஆஸ்திரேலிய நிபுணர்கள்

592
0
SHARE
Ad

MH370 SEARCHசிட்னி- அண்மையில் ரீயூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட எம்எச் 370 விமானத்தின் பாகம், தேடும் நடவடிக்கையை மாற்றியமைக்காது என ஆஸ்திரேலிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரீயூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்டது எம்எச் 370 விமானத்தின் பாகம்தான் என்பதை பிரான்ஸ் தற்போது உறுதி செய்திருப்பதை வரவேற்பதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு பணிமனையின் தலைமை ஆணையர் மார்டின் டோலன் கூறினார்.

“அந்தப் பாகம் 370 விமானத்தின் பாகம்தான் என்ற யூகத்தின் பேரிலேயே தொடர்ந்து எங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம். இப்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நமக்கு பயனளிக்கும் தகவல். அதேசமயம் இதனால் தேடுதல் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. விமானம் இருக்கும் இடம் குறித்த எங்களது சிந்தனையோட்டமும் மாறவில்லை.”

#TamilSchoolmychoice

“விமானம் மாயமான பிறகு பல மாதங்களுக்குப் பின்னர் அதன் இறக்கைப் பகுதியுடன் தொடர்புடைய பாகம் பிரிந்திருக்க வேண்டும். அது தற்போது கிடைத்திருப்பதை அடுத்து பல்வேறு சூழ்நிலைகள் குறித்து நாம் ஆராய வேண்டியிருக்கலாம்.”

“விமானத்தின் பாகம் கிடைத்திருப்பதால், விமானம் தேடப்படும் பகுதியை மாற்றும் நிலைமை ஏற்படவில்லை. எனினும் நடப்பவற்றை, சிறு முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்,” என்று மார்டின் டோலன் மேலும் தெரிவித்துள்ளார்.