Home உலகம் பிரான்ஸ் முஸ்லீம் மாநாட்டில் மேலாடையின்றி மேடையேறி முழக்கமிட்ட பெண்கள்!

பிரான்ஸ் முஸ்லீம் மாநாட்டில் மேலாடையின்றி மேடையேறி முழக்கமிட்ட பெண்கள்!

663
0
SHARE
Ad

2_2548629fபாரீஸ் – பிரான்ஸில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் திடீரென இரண்டு பெண்கள் மேலாடை இல்லாமல் மேடையேறி முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

“பெண்களை அடிக்க ஆண்களுக்கு உரிமை உண்டா?” என்ற தலைப்பில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இஸ்லாமியர்களின் விவாத மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்டு முஸ்லீம் பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மேடை மீதேறிய 2 பெண்கள் தங்களது மேலாடையைக் கழற்றி எறிந்தனர்.அவர்கள் இருவரும் தங்களது முதுகு மற்றும் மார்புப் பகுதிகளில் ‘என்னை யாரும் அடக்கவும் முடியாது; அடிக்கவும் முடியாது’ என்னும் அர்த்தம் தொனிக்கும் வாசகத்தைக் கருப்பு மையால் எழுதியிருந்தனர்.

#TamilSchoolmychoice

மேலாடைக் கழற்றி எறிந்ததோடு, பேசிக் கொண்டிருந்த பேச்சாளர்களைத் தள்ளி விட்டு, மைக்கைப் பிடுங்கி பிரெஞ்சு மற்றும் அரபு மொழியில் பெண்களுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர்.

இதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியானார்கள்.

சிலர் ஓடி வந்து அந்த இரு பெண்களையும் கீழே தள்ளிவிட்டு அடிக்க ஆரம்பித்தனர். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர்  அந்த இரு பெண்களையும் கைது செய்தனர்.

அந்த இரு பெண்களும் பெமென் என்ற பெண்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இப்படித்தான் அடிக்கடி போராட்டங்களில் குதித்துப் பரபரப்பைக் கிளப்புவார்களாம்.குறிப்பாக மேலாடை இல்லாமல்தான் போராட்டத்தில் ஈடுபடுவார்களாம்.

பெண்களுக்கு எதிரான இந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு தடைக் கோரி பிரான்ஸில் இணைய கையெழுத்து இயக்கமும் முன்னதாக நடத்தப்பட்டது. இதில் சுமார் 6 ஆயிரம் பேர் கைழுத்திட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.