மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை அரசு வழக்கறிஞர் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பான செய்தி மலேசியாகினி இணையதளத்தில் வெளியானது.
இதையடுத்தே இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது என பிற தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே தாங்கள் வெளியிட்ட செய்தி சரியானது என்று தெரிவித்துள்ள ஸ்டீவன் கான், எந்தவித அச்சமும் இன்றி தொடர்ந்து செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிடப் போவதாகக் கூறியுள்ளார்.
“அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் தகுந்த ஒத்துழைப்பை அளிக்க நான் தயாராக உள்ளேன். அதேசமயம் எங்களது செய்தி மூலாதாரங்கள் குறித்த தனித்த விவரங்களை தெரிவிக்க இயலாது. நாங்கள் வெளியிட்ட கட்டுரை சரியானது. எல்லாவற்றுக்கும் மேலாக அந்தச் செய்தி பொய்யானது அல்ல என்றும், அப்படியொரு இடமாற்றம் நடந்துள்ளது என்றும் சட்ட அமைச்சரே உறுதி செய்துள்ளார்” என ஸ்டீவன் கான் மேலும் தெரிவித்துள்ளார்.