கேள்வி கேட்ட செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் காறித் துப்பி அநாகரீகமாக நடந்து கொண்ட விஜயகாந்த் குறித்து இன்று தர்மபுரியில் செய்தியாளர்கள் டாக்டர் அன்புமணியிடம் கருத்து கேட்டனர்.
அதற்குப் பதிலளித்தபோதுதான் அன்புமணி மேற்கண்ட கருத்தைக் கூறியுள்ளார்.
“அதேவேளையில் கலைஞர், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை. விஜயகாந்தை கூட்டணிக்கு அழைப்பவர்கள் தூரமாக நின்றே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றும் கிண்டலாகக் கூறியுள்ளார் அன்புமணி.