Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு வேறு அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றத்தால் அடுத்த கட்ட பரபரப்பு!

ஜல்லிக்கட்டு வேறு அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றத்தால் அடுத்த கட்ட பரபரப்பு!

549
0
SHARE
Ad

jallikattu759புது டெல்லி – தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கை நீதிபதி பானுமதி ஏற்கனவே விசாரித்ததால், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றம் செய்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டார்.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு தொடரப்பட்டால் அது தொடர்பாக தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொண்டு தங்கள் தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி ‘கேவியட்’ மனு ஒன்றை தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.