Home Featured நாடு சரவாக்கில் நுழைய பூச்சோங் எம்பி கோபிந்த் சிங்கிற்கும் தடை!

சரவாக்கில் நுழைய பூச்சோங் எம்பி கோபிந்த் சிங்கிற்கும் தடை!

592
0
SHARE
Ad

Gobind Singh 440 x 215கோலாலம்பூர் – சரவாக்கில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில், தற்போது பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோவும் இணைந்துவிட்டார்.

காரணம், இன்று செவ்வாய்கிழமை காலை கூச்சிங் அனைத்துலக விமான நிலையம் சென்ற அவரை குடிநுழைவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவருக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 11.30 மணிக்குத் தான் அங்கு சென்றதாகவும், தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பதை அறிந்து மதியம் 2.45 மணி விமானத்தில் கோலாலம்பூர் திரும்பவிருப்பதாகவும் ஸ்டார் இணையதளத்திற்கு அளித்துள்ள தகவலில் கோபிந்த் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice