தான் சற்று பயந்த சுபாவம் உள்ளவர் என்பதோடு, அல்தான்துயா கொல்லப்பட்ட அன்று தான் கோலாலம்பூரில் இஸ்லாமிய ஆதரவற்றோர் நலன் சங்க நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன் என இன்று வெளியிடப்பட்ட தமது சுய சரிதையில் கூறியுள்ளார்.
அல்தான் துயா கொலையில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதின் கூறிக் கொண்டுள்ளதை ரோஸ்மா மான்சோர் மறுத்துள்ளார்.
தமக்கு எதிராக கூறப்பட்ட ‘அவதூறு’ காரணமாக தாம் புக்கிட் அமானில் பல மணி நேரத்துக்கு விசாரிக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
Comments