Home 13வது பொதுத் தேர்தல் சிலாங்கூரை தே.மு. கைப்பற்றினால் மாநில மந்திரி பெசார் யார்?

சிலாங்கூரை தே.மு. கைப்பற்றினால் மாநில மந்திரி பெசார் யார்?

533
0
SHARE
Ad

Dato’-Noh-Omarகோலாலம்பூர், மார்ச்.20-  அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் 13ஆவது பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் வசமுள்ள தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்ற கடுமையாகப் பாடுபட்டு வருகிறது.

குறிப்பாக, அம்னோ தங்களின் கௌரவப் பிரச்சனையாக கருதும் சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற கடுமையான போராட்டத்தில் இறங்கியுள்ளது.

வரும் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி கைப்பற்றினால் யார் மாநில மந்திரி பெசார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளராக பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இருந்து வருகிறார். பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றினால் தேசிய முன்னணி சார்பில் மந்திரி பெசார் பதவிக்கு முன்னாள் பொதுப்பணி அமைச்சரும் நடப்பு சிப்பாங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான  முகமட் ஜீன்  முகமட் (முகப்புப் படம்), மற்றும் விவசாயத் துறை அமைச்சர் நோ ஓமார் (படம் – இடது)  ஆகியோரின் பெயர்கள்  அடிபடுகின்றன.

ஆனால்  அண்மையில் நடந்த தேசிய முன்னணியின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட இருவரும் தங்களுக்கு மந்திரி பெசார் பதவி வேண்டாம் என்றும் தாங்கள் நாடாளுமன்றத் உறுப்பினர்களாகவே தொடர்ந்து இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆதலால்  சிலாங்கூரை தேசிய முன்னணி வெற்றி பெற்று கைப்பற்றினால் புதிய முகம் ஒருவர் மந்திரி பெசார் பதவியை ஏற்பார் என்று நம்பப்படுகிறது.

ஆனால் அவர் முன்கூட்டியே அறிவிக்கப்படுவாரா அல்லது தேசிய முன்னணி சிலாங்கூரை கைப்பற்றியவுடன்தான் யார் மந்திரி புசார் என்பது அறிவிக்கப்படுமா என்ற பரபரப்பு தற்போது சிலாங்கூர் அம்னோ வட்டாரங்களில் பரவி வருகின்றது.