வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கட்டணத் திட்டங்களை ஜியோ அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனாலும், உள்ளூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகளுக்கான இலவசச் சலுகை தொடர்ந்து இருக்கும் என்றும் முகேஸ் அம்பானி தெரிவித்தார்.
தற்போது அடிப்படைக் கட்டணமாக 99 ரூபாய் செலுத்தி ஜியோ சிம் சந்தாதாரராக ஆகலாம். அதேவேளையில் மாதந்தோறும் 303 ரூபாய் செலுத்தி நிரந்தர சந்தாதாரராகி அளவற்ற குரல் அழைப்புகளையும், இணையவசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.