தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுத்திருந்த வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் முடிவில், இன்னும் 2 மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் கொண்டு வந்து, மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கி அதனை அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments