Home Featured உலகம் தாக்குதல் நடந்தது எப்படி? வரைபட விளக்கம்!

தாக்குதல் நடந்தது எப்படி? வரைபட விளக்கம்!

652
0
SHARE
Ad

britain-parliament-attack-descriptionஇலண்டன் – நேற்று புதன்கிழமை பிற்பகலில் இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற தாக்குதல் எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பதை மேலே உள்ள படம் விளக்குகிறது.

இலண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் என்பது சுற்றுப் பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கில் கூடும் இடமாகும். இங்கு தனது ஹூண்டாய் ரக வாகனத்தைச் (Hyundai 4 x 4) செலுத்திய தாக்குதல்காரன் முதலில் பாலத்தில் இருந்த நடைபாதை பாதசாரிகள் மீது மோதியிருக்கிறான்.

பின்னர் அங்கிருந்து பாலத்தின் மீது பாதசாரிகளுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் வாகனத்தைச் செலுத்தி மேலும் பல பாதசாரிகள் மீது மோதியிருக்கின்றான்.

#TamilSchoolmychoice

பாலத்தைக் கடந்ததும், நேராக வாகனத்தை நாடாளுமன்றக் கட்டிட நுழைவாயில் (கேட்) மீது மோதியிருக்கின்றான். இந்த கட்டத்தில்தான், அங்குக் காவல் பணியில் இருந்த காவல் துறை அதிகாரியைக் கத்தியால் குத்தி அவன் தாக்கியதில், அந்த காவல் துறை அதிகாரி மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல்காரன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

(நன்றி: வரைபட விளக்கம் – டெய்லி மெயில் பத்திரிக்கை இணையத் தளம்)