பினாங்கு – பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தேசிய அளவிலான கவிஞர்கள் கலந்து கொள்ளும் கவிதை போட்டியை நடத்துவுள்ளது என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் வெ.தேவராஜுலு அறிவித்தார்.
பினாங்கு மண்ணில் குறிப்பாக பிறை வட்டாரத்தில் பல சமூக இயக்கங்களின் வழி சேவையாற்றியவருபவரும், பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினருமான செந்துறைக் கவிஞர் சோலை முருகன் பெயரில் நடத்தப்படும் கவிதைப் போட்டியில் மலேசியக் கவிஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மரபுக் கவிதை, புதுக் கவிதை என்று இரு பிரிவாக நடத்தப்படும் இக்கவிதை போட்டியில் முதல் பரிசு 300 வெள்ளி இரண்டாவது பரிசு 250 வெள்ளி மூன்றாவது பரிசு 150 வெள்ளி நான்காவது பரிசு 50 வெள்ளி என்று இரு பிரிவிற்கும் வழங்கப்படும். பரிசுகளனைத்தும் பினாங்கில் டிசம்பர் திங்கள் நடைபெறும் கவிதை விழாவில் வழங்கப்படும் என்று பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் டாக்டர் வெ.தேவராஜுலு தெரிவித்தார்.
கவிதைகளை எழுதும் கவிஞர்கள் தங்களின் சொந்த படைப்பாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வேறு எந்த நூலிலோ அல்லது நாளிதழ்களிலோ வெளிவராத கவிதையாக இருப்பது அவசியம். கவிதைகள் பினாங்கு எழுத்தாளர் சங்கத்திற்குக் கிடைக்கும் பட்சத்தில் கவிதைகளைப் புத்தகமாகவோ அல்லது நாளிதழ்களில் வெளியிடவோ பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு கவிஞர்கள் முழு உரிமை அளிப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
கவிஞர்கள் கவிதையின் தலைப்புடன் தனித் தாளில் எழுதியும், உறுதி தகவல்கள், சரியான முழுமையான முகவரி, கடப்பிதழ் அளவு புகைப்படம், அடையாள அட்டை நகல் போன்றவற்றை மற்றொரு தனித்தாளில் எழுதியும் ஒன்றாக எதிர்வரும் 15-11-2017 நாளுக்குள் அனுப்ப வேண்டும். கவிதைகளைத் தாங்கள் விரும்பும் பாவினத்தில் புனையலாம். குறைந்த பட்சம் 4 கண்ணிகள் இருத்தல் அவசியம். புதுக் கவிதை குறைந்த பட்சம் 80 வரிகள் இருப்பது அவசியம் என்றும் டாக்டர் தேவராஜுலு கூறினார்.
தொடர்பு எண் : 013-4853128 செ.குணாளன், 012-4881553 கு.கிருஷ்ணசாமி.
கடிதத்தின் முகப்பில் செந்துறைக் கவிஞர் சோலை முருகன் கவிதைப் போட்டி என்று குறிப்பிடவும். கவிதைப் போட்டியில் நடுவர்களின் தீர்ப்பே இறுதி முடிவானது.
கவிதை அனுப்ப வேண்டிய முகவரி:
செ.குணாளன், செயலாளர்,பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம்.
Se.GUNALAN, SETIAUSAHA PERSATUAN PENULIS – PENULIS TAMIL PULAU PINANG, NO, 3653, JALAN NEW FERRY, 12100 BUTTERWORTH.