கோலாலம்பூர்- பூகிஸ் இன வழித் தோன்றல்களை
சிறுமைப் படுத்திப் பேசியதாக தம்மீது கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டுத் தொடர்பாக காவல் துறை இன்னும் தன்னை அழைத்து விசாரிக்கவில்லை என்று முன்னாள் பிரதமரும் பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
பிரதமர் நஜிப்பை புகிஸ் இன கடற்கொள்ளையர் வழி வந்தவர் என்றும் அவர் சுலாவசிக்கு அனுப்பப்பட வேண்டியவர் என்றும் அவர் விமர்சித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மகாதீரின் கருத்துகள் குறித்து சிலாங்கூர் சுல்தானும் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்ததோடு, இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்தோனிசியத் தலைவர் ஒருவரும் பூகிஸ் இன மக்களை சிறுமைப்படுத்தியதற்காக மகாதீர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
தனது கருத்து நஜிப்பை மட்டுமே குறிக்கும் என்றும் மாறாக பூகிஸ் இன மக்களைத் தான் சிறுமைப்படுத்தவில்லை என்றும் மகாதீர் விளக்கம் தந்திருக்கிறார்.
- மு.க.ஆய்தன்