Home இந்தியா ராஜீவ் கொலை: 7 பேரையும் விடுவிக்க உதவுமாறு சோனியாவுக்கு முன்னாள் நீதிபதி கடிதம்!

ராஜீவ் கொலை: 7 பேரையும் விடுவிக்க உதவுமாறு சோனியாவுக்கு முன்னாள் நீதிபதி கடிதம்!

1012
0
SHARE
Ad

rajivபுதுடெல்லி – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களையும் கருணை அடிப்படையில் விடுவிக்கக் கோரி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தாமஸ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இவ்வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட நால்வருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள் குழுவில் தாமசும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த 2000-ம் ஆண்டு நளினிக்கும், 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் தூக்கு தண்டனை இரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதன் பின்னர், குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அந்தத் தீர்மானத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இதனிடையே, இந்த 7 பேரையும், கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு, மத்திய அரசை வலியுறுத்தும் படி, சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு முன்னாள் நீதிபதி தாமஸ் கோரிக்கை விடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.