நேய்பிதாவ் – மியன்மார் இராணுவத்தின் தாக்குதல்கள் காரணமாக அண்டை நாடான வங்கதேசத்தில் லட்சக்கணக்கான ரோஹின்யா முஸ்லிம்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து கொடுத்து வரும் நெருக்கடிகள் காரணமாக, மியன்மார் மக்கள் தலைவர் ஆங் சான் சூகி, வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அபுல் ஹசான் மாமுட் அலியைச் சந்தித்தார்.
இச்சந்திப்பினை அடுத்து நேற்று நவம்பர் 23-ம் தேதி வியாழக்கிழமை, இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
அதன்படி, இன்னும் இரண்டு மாதங்களில் வங்கதேசத்தில் இருக்கும் ரோஹின்யா முஸ்லிம்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.