சரியான ‘தில்’தான் சந்தானத்துக்கு என தமிழ்த் திரையுலகம் மூக்கின் மீது விரல் வைத்துக் காத்திருக்க, அறிவித்தபடியே ”சக்கைப் போடு போடு ராஜா’ இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கிறது.
தில்லுக்கு துட்டு – என்ற சந்தானம் படம் ஒன்றின் தலைப்பைப் போலவே, இப்போது சந்தானத்தின் தில்லுக்கு சரியான பரிசு கிடைத்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘சக்கைப் போடு போடு ராஜா’ படத்தின் விமர்சனங்கள் படம் சிறப்பாக வந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கும் நிலையில் இந்தப் படமும் சந்தானத்திற்கு வெற்றிப் படமாக அமையும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்தப் படத்தின் திரை விமர்சனம் நாளை சனிக்கிழமை செல்லியலில் வெளியாகும்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-