Home Video “வேலைக்காரனுக்கு” ஈடு கொடுக்கும் “சக்கைப் போடு போடு ராஜா” சந்தானம்!

“வேலைக்காரனுக்கு” ஈடு கொடுக்கும் “சக்கைப் போடு போடு ராஜா” சந்தானம்!

1241
0
SHARE
Ad

sakka podu podu rajaசென்னை – சிவகார்த்திகேயன் நடிப்பு – ‘தனி ஒருவன்’ புகழ் மோகன் ராஜா இயக்கம் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘வேலைக்காரன்’ இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் தனது ‘சக்கைப் போடு போடு ராஜா’ திரைப்படமும் வெளியாகும் என அறிவித்து தமிழ்த் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் நடிகர் சந்தானம்.

சரியான ‘தில்’தான் சந்தானத்துக்கு என தமிழ்த் திரையுலகம் மூக்கின் மீது விரல் வைத்துக் காத்திருக்க, அறிவித்தபடியே ”சக்கைப் போடு போடு ராஜா’ இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கிறது.

தில்லுக்கு துட்டு – என்ற சந்தானம் படம் ஒன்றின் தலைப்பைப் போலவே, இப்போது சந்தானத்தின் தில்லுக்கு சரியான பரிசு கிடைத்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘சக்கைப் போடு போடு ராஜா’ படத்தின் விமர்சனங்கள் படம் சிறப்பாக வந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கும் நிலையில் இந்தப் படமும் சந்தானத்திற்கு வெற்றிப் படமாக அமையும் என்பது உறுதியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தின் திரை விமர்சனம் நாளை சனிக்கிழமை செல்லியலில் வெளியாகும்.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-