Home நாடு அன்வாருக்கு மீண்டும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை!

அன்வாருக்கு மீண்டும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை!

834
0
SHARE
Ad
கோலாலம்பூர் – முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு, நேற்று வியாழக்கிழமை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
நேற்று காலை 10 மணியளவில், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின், எலும்பு மற்றும் நோயியல் துறை மருத்துவர் ஃபசிர் முகமது தலைமையில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக அன்வாரின் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
எனினும், இந்த அறுவை சிகிச்சைப் பற்றிய முழு விவரத்தை அவர்கள் வெளியிடவில்லை.
ஓரினப்புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று வரும் அன்வாருக்கு, கடந்த 2017 நவம்பர் மாதம் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனையடுத்து, செராஸ் மறுவாழ்வு மருத்துவமனையில், அன்வார் மேல் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.