Home உலகம் 60 இரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியது

60 இரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியது

916
0
SHARE
Ad

வாஷிங்டன் – (மலேசிய நேரம் இரவு 10.30 நிலவரம் – கூடுதல் தகவல்களுடன்) பிரிட்டிஷ் உளவாளி ஒருவர் நஞ்சு செலுத்தப்பட்டு இரஷிய உளவுத் துறையால் கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்கா அதிரடியாக 60 இரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றப் போவதாக அறிவித்திருக்கிறது.

இவர்களின் 48 பேர் வாஷிங்டனில் உள்ள இரஷியத் தூதரக அதிகாரிகள் ஆவர். எஞ்சிய 12 அதிகாரிகள் ஐக்கிய நாட்டு மன்றத்தில் பணிபுரிபவர்கள் ஆவர்.

ஏற்கனவே பிரிட்டனும், 23 இரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றப் போவதாக அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

நேட்டோ நாடுகளின் நட்புறவு உடன்பாடுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அமைவதாக வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது.

சியாட்டல் என்னும் அமெரிக்க நகரிலுள்ள இரஷியாவின் துணைநிலை தூதரகமும் மூடப்படும் என அமெரிக்கா கூறியிருக்கிறது.

அமெரிக்காவின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியமும் தனது இரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றப் போவதாக அறிவித்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பிய நாடுகளும் தங்களின் நாடுகளில் உள்ள இரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவோம் என தொடர்ந்து அறிவித்து வருகின்றன.

இதுவரையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 14 நாடுகள் தங்களின் நாடுகளில் உள்ள இரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவோம் என அறிவித்திருக்கின்றன.

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து இரஷியாவும் பதில் நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அந்த பதில் நடவடிக்கை எத்தகைய விதத்தில் அமைந்திருக்கும் என்பதை இரஷியா இன்னும் அறிவிக்கவில்லை.