pengundi.spr.gov.my என்ற இணையதளத்திற்குச் சென்று வாக்காளர்கள், தங்களின் அடையாள அட்டை எண்ணை தட்டச்சு செய்தால், வாக்களிக்கும் தொகுதி, வாக்களிப்பு மையம் முதலான தகவல்களைப் பெற முடியும்.
மேலும், அதே செயலியில் வேட்பாளர்களின் பெயர்களையும், முடிவுகளையும் அறிந்து கொள்ள முடியும்.
அதேவேளையில், 03-8892 7018 என்ற தேர்தல் ஆணயத்தின் எண்ணிற்கு அழைத்தோ அல்லது 15888 என்ற எண்ணிற்கு “SPR <space> IC number.” என தட்டச்சு செய்து அதில் அடையாள அட்டை எண்ணைக் குறிப்பிட்டு, குறுஞ்செய்தி அனுப்பியும் மேற்ச்சொன்ன தகவல்களைப் பெற முடியும்.